திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நலம் நலிவடைந்து கடந்த 11 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருந்து 7-வது அறிக்கை என்னவாக இருக்கும் என தமிழக மக்கள். மிகவும் கவலைக்கிடம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறுநீரக தொற்று, வயது முதிர்வின் காரணமாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நலம் நலிவடைந்து கடந்த 11 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மாலை காவேரி மருத்துவமனையின் நிர்வாகத்திடம் இருந்து அறிக்கை வெளியானது.நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவரின் உறுப்புகளை செயல்படுத்துவதில் சிக்கலாக உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரம் கழித்து தான் எதுவும் கூற முடியும் என தெரிவித்திருந்தது.
இதனால், கருணாநிதியின் குடும்பத்தார்கள் அனைவரும் மருத்துவனையில் திரண்டனர்.மேலும் திமுக தொண்டர்கள் அடுத்த ஒரு சில மணி நேரங்களாக காவேரி மருத்துவமனை முன் குவிந்து வருகின்றனர்.
திமுக எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அதன் பின்னர், நேற்றிரவு கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு, இன்று காலை மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். இன்று கலைஞருக்கு 11-வது நாளாக டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தது வருகின்றனர். ஆனால் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் கை பலன் அளிக்கவில்லை.
உடலில் செலுத்தப்படும் மருந்துகள் அனைத்தும் ரத்த தட்டணுக்கள் அளவு குறைவு காரணமாக மெதுவாகவே செயல்படுகின்றன. இதனால் கருணாநிதி உடல் நிலை இன்றும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. மேலும், கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உலக அளவில் புகழ் பெற்ற டாக்டர் முகம்மது ரேலே கொடுத்துள்ள ஆலோசனையின் படி கருணாநிதிக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அதற்கு ஏற்ப கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய அடுத்தக்கட்ட சிகிச்சை பற்றி டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர் . அந்த சிகிச்சையை கருணாநிதி உடல் ஏற்றக்கொண்டதா என அடுத்துவரும் அறிக்கையில் தான் தெரியவரும்.