பிரேஸில் நாட்டில், சென்டா கதரினா பகுதியில் அதிசய உருளைக்கிழங்கொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த உருளைக்கிழங்கு மனிதர்களின் பாதத்தைப் போல் தோற்றம் அளிப்பதோடு அதில் விரல்களும், முடிகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். மனித பாதத்தில் 5 விரல்களே காணப்படும். ஆனால் குறித்த கிழங்கில் 5 விரல்களுக்கு மேலதிகமாக ஒரு சிறிய விரலும் காணப்படுகின்றது.
சுமார் 8 கிலோகிராம் நிறையுடைய இந்த கிழங்கு பிரேஸில் நாட்டைச் சேர்ந்த மார்லி என்பவருடைய தோட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற அதிசய கிழங்கு தோட்டத்தின் உரிமையாளர் குறித்து மார்லி தெரிவிக்கையில்,
இந்த வகையான அதிசயத்தக்க கிழங்கை நான் எங்கும் கண்டதில்லை. நாங்கள் சுமார் 6 வருடங்களாக தோட்டம் செய்து வருகின்றோம். வீடடுக்கு பின்புறத்தில் கிழங்குடன் வேறு மரக்கறி தோட்டமும் வைத்துள்ளோம்.
நாம் இந்த கிழங்கை அறுவடை செய்யும் போது மிகவும் பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நாம் எமது அன்றாட உணவுத் தேவைக்காகவே இவற்றை பயன்படுத்துகின்றோம். எவ்வாறு இதனை உண்பதென்று புரியவில்லையெனத் தெரிவிக்கின்றார்.