ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், பிரித்தானியா பவுண்ட்சின் பெறுமதியில் வீழச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யூரோ மற்றும் அமெரிக்க டொலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ட்ஸ் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடைக்கால விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரித்தானியர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிலும், கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள புலம் பெயர் தமிழர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்பவர்களுக்கு இந்த நிலை பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவும் இடையில் முக்கிய உடன்பாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென்ற செய்திகள் வெளியான பின்னர் பவுண்சின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்து.