அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதற்காக ஆராய்ந்து பார்க்கப்படும் தகுதியை மேலும் கடுமையாக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 4 வருடங்கள் அந்த நாட்டில் வதிவிடத்திற்கான காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
ஆங்கில மொழி திறனை ஆராய்ந்து பார்க்கும் பரீட்சைக்கு முகம் கொடுக்கும் நிலை விண்ணப்பதாரிகளுக்கு ஏற்படும்.
இதற்கு மேலதிகமாக அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அந்த நாட்டின் பெறுமதி தொடர்பில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் பரீட்சை ஒன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சையில் மூன்று முறைக்கு மேல் தேர்ச்சியடையாமல் இருக்க கூடாதென அந்த ஒழுங்கு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.