மருதனார்மட ஆஞ்சநேயர் கோயில் பற்றிய சிறப்பு தொகுப்பு !

யாழ்ப்பாணத்திலே மருதனார் மட சந்தியின் அண்மையில் வீதியின் மேற்கே கிழக்கு நோக்கிய நெடிய கோபுரத்துடன் 18 அடி உயர்ந்த மாருதி தேவன் நின்று அருளாட்சி செய்கின்ற திருத்தலமாகும். 22-04-1999 பிரமாதி வருட சித்திரை மாதம் 9 ஆம் திகதி வியாழக்கிழமை பூர்வ சப்தமித் திதியில் புனர் பூச நட்சத்திரத்தில் ஆலயம் அங்குராற்பணம் செய்யப்பட்டது. கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி என்பவரால் அத்திவாரம் இடப்பட்டது. 9 அடி உயரமான மூலவிக்கிரகத்தை ஒரே கருங்கல்லினால் இந்தியாவிலே ஆக்கி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. மூலஸ்தானம் திருமூர்த்தியால் கட்டப்பட்டது. இப்பணிக்கு இணுவில் அன்பர் ஓருவர் உதவினார். பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட விநாயகர் பரிவாரத் தெய்வமாக அமைவு பெற்றுள்ளது. கோயில் முன்பக்கத்திலே சனீஸ்வரன் கோயில் இணுவில் அடியவரான தனவந்தரால் நிறைவேற்றப்பட்டது.

The 72-foot Maruthanar Madam Anjanajar statue of the Hindu god Hanuman, just north of Jaffna. According to the Ramayana, Hanuman leapt from India to Sri Lanka in search of Sita.

இவ்வாலய வடிவமைப்பு வேலைகள் யாவும் சிற்பசாஸ்திரத்தில் சொல்லப்பட்டதற்கிணங்க 10-6 கோயிலாக அமைக்கப்பட்டது. சிற்பக்கலை நிபுணரால் செயற்கை மலைபோன்ற அமைப்பினை உருவாக்கி உள்ளமைப்பு 110அடி நீளமும் 56 அடி அகலமும் கொண்டதாக அமைவுபெற்றுள்ளது. கீழ்மண்டபம் கல்யாண மண்டபமாகவும், அன்னதான மண்டபமாகவும் உபயோகப் படக்கூடியவகையில் அமைவுபெற்றுள்ளது.

29-01-2001 தைத்திங்கள் காலை 8.30-10.30 உத்தரட்டாதி நட்சத்திரமும் பஞ்சமித்திதியும் சித்தயோகமும் கூடிய வேளையில் பெருமானுக்கு கும்பாபிஷேகம் இடம்பெற்றது. தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்றது. குhலை, மதியம், மாலை என மூன்று வேளைப்பூசைகள் இடம்பெற்று வருகின்றன. சனிக்கிழமைகளில் காலை 6மணிமுதல் மாலை 6 மணிவரை திருநடை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் அபிடேகம் நடைபெறுவது முக்கிய அம்சமாகும். மாமல்லபுரசிற்ப வல்லுனர் ஞானமூர்த்தியின் மனதிலே குடிகொண்ட அனுமன் கோபுர அமைப்ப முறையை கூற திருவருள்துணைக்கொண்டு செயற்பட முனைந்தார்.

 

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்