திருச்சி மாவட்டத்தில் தாலி கட்டும் நேரத்தில் தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியதால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
34 வயதான ஜெகதீசன் என்பவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனது உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருமணத்திற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார் ஜெகதீசன்.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மணப்பெண்ணுக்கு கொடுமுடி கோவிலில் ராகு-கேது பரிகாரம் செய்யப்பட்டது. பிறகு திருமணத்துக்காக மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்திருந்தார்.
திருமணத்துக்கு பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தனர். மாப்பிள்ளை மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்காக முயன்றார்.
அப்போது திடீரென மணப்பெண் மாப்பிள்ளையை தாலி கட்ட விடாமல் கையை பிடித்து தட்டி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும் பிடிக்காமல் தான் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து இரு வீட்டாரையும் சேர்ந்த உறவினர்கள் கலந்து பேசினர். மணப்பெண் தனக்கு திருமணம் வேண்டாம் என கண்டிப்பாக கூறியதால் திருமணம் நிறுத்தப்பட்டது.
கடைசி நேரத்தில் மணமகள் இவ்வாறு நடந்துகொண்டதால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.