கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…..

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…..

கண்ட நாள் முதலாய் காதல்

பெருகுதடி…..

வண்ண நிலவே நின் ஒளி முகம் காணாது,

ஆவி உருகுதடி…..

தென்றல் சுடுகுதடி! – தித்திக்கும்

தேனும் கசக்குதடி!

மலர் மீது கிடந்தாலும்,

மனம் மிக வாடுதடி!

 

வைகறையை, அதில் வரும் ஒளியை

உன் புன்நகையாய் பூப்பவளே…

என் விரல் பட்டு மலர்ந்திடும் பூமகளே!

 

நின்னை, நினைத்திட நினைத்திட

எண்ணங்கள் ஆயிரம்….

நீள்கடல் நீந்தும் அலைகளாய் மோதும்!

உன்னை அணைத்திட அணைத்திட

என்னுள் ஆயிரம் ஆயிரம்,

கவிதைகள் ஊறும்!

 

நீண்ட இருளில் உறங்கும்,

பௌர்ணமி வானத்தின் நிலவாய் நீ….

உன்னை மேகங்கள் கடக்கும்,

சில மின்மினிகள் காவல் செய்யும்!

இந்த ஏழை மனம் ஏங்கும்,

அடிக்கடி நெடு மூச்சு வாங்கும்!

உன்னை மறைக்கும் மேகங்கள் மீது,

எனக்கு கோபங்கள் இல்லை…

காரணம்,

மேகம் மறைக்காத நிலவும்,

காலம் மறைக்காத நீயும்,

அழகாய்த் தெரிவதேயில்லை….

சஜீவன்