31 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ரஷ்ய பெண்ணின் உடல், பனிமலையில் மெழுகு சிலை போல் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் எலினா பேஸிகினா, இவர் அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்திருக்கிறார்.
மலை ஏற்றத்தில் ஆர்வம் கொண்ட எலினா 1987 ஆம் வருடம் தனது ஆறு நண்பர்களுடன் ஐரோப்பாவின் உயர்ந்த மலையான எல்பிரஸ் மலை ஏற்றத்தில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அங்கு எற்பட்ட பனிச்சரிவில் எலினாவும் அவர்களது நண்பர்களும் சிக்கிக் கொண்டனர்.
இதில் எலினா மற்றும் அவரது நண்பர்களை தேடும் பணி நடத்தப்பட்டு பின்னர் நீண்ட நாட்களுக்கு பின்னர் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 31 வருடங்களுக்கு பின்னர், அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா குழுவினர்,எலினாவின் உடலை 4,000 மீற்றர் தூரத்தில் கண்டுபிடித்துள்ளனர். முற்றிலும் பனியால் முடப்பட்டு மெழுகு சிலை போல் இருக்கும் எலினாவை அவர் அணிந்திருந்த உடை மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.
எலினாவி தாய் மற்றும் தந்தை இறந்த நிலையில் எலினாவின் உடல் கண்டுப்பிடிக்கப்பட செய்தி அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து எலினாவின் உறவினர்கள் கூறும்போது, ‘‘நாங்கள் எலினாவுக்காக 30 வருடங்கள் காத்திருந்தோம். அவளுக்கு என்ன ஆயிருக்கும் என்று நாங்கள் முன்னரே கணித்திருந்தோம்.
இருப்பினும் அவள் எங்கோ தப்பி சென்றுருப்பாள். இல்லை அவளை யாராவது கடத்தி இருப்பார்கள் என்று நினைத்திருந்தோம்”என்று கூறியுள்ளதோடு. அனைவரும் அதிர்ச்சியில் பூரித்துள்ளனர்.