அவுஸ்திரேலியாவை சுற்றி பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சமகாலங்களில் எந்தவித அழிவுகளும் ஏற்படாமல் தப்பித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் கடலோர நகரங்களில் விண்கல் தாக்கங்கள் அல்லது நில அதிர்வு நடவடிக்கைகளால் அழிவுகரமான பேரலைகளால் தாக்கப்படாமல் இருப்பது பெரும் அதிர்ஷ்டம் தான் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அவுஸ்திரேலியாவை எந்த நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
1149ஆண்டு அவுஸ்திரேலியாவை சுனாமி பேரலைகள் தாக்கி பேரழிவை ஏற்படுத்தின. 60 மீற்றர் உயரத்திற்கு அலைகள் மேலெழுந்த நிலையில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதற்கமைய 4000 – 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறான பாரிய ஆபத்துக்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதற்கமைய மீண்டும் அவ்வாறான தாக்குதல் ஒன்று எந்த நேரத்திலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இதன்மூலம் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு ஆபத்தான சுனாமி ஒன்று ஏற்படாமல் இருப்பது மிகவும் அஷ்டம் என்றே கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி சிட்னி நகரில் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதனை தடுக்க முன்னாயத்தங்களை செய்யப்பட வேண்டும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவுஸ்தியாவின் பல நகரங்களில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.