தமிழ் மக்கள் பேரவையினரால் எதிர்வரும் 27 வடக்கு கிழக்கில் பூரண கடை அடைப்பிற்கு அழைப்பு…..

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் வரும் 27ம் திகதி பூரண கதவு அடைப்பிற்கு அழைப்பு விடுப்பதற்கு நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற த.ம.பேரவையினரின் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
த.ம.பேரவையினரின் சந்ரிப்பு நேற்றைய தினம் திருகோணமலையில் உள்ள ஓர் விடுதியில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட.ட இணைத் தலைவர்கள் தலமையில் இடம்பெற்றது.
இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்அமைப்பின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் , த.தே.ம.முண்ணனியின் தலைவர் க.குமார் உள்ளிட்ட 36பேர் கலந்து கொண்டனர்.
இச் சத்திப்பு முதலமைச்சரின் உரையுடன் ஆரம்பமானது . இச் சந்திப்பில் வடக்கில் கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலினை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் வரும் 27ம் திகதி பூரண கதவு அடைப்பிற்கு அழைப்பு விடுத்து கைதிகள் விடுதலை , நில விடுவிப்பு , காணாமல்போனோர் விடயங்களிற்காக போராடும் மக்களிற்கு பங்களிப்பதாக தீர்மானிக்கப்பட்டது.


அத்துடன் அரசியல் யாப்புத் தொடர்பில் மாவட்ட ரீதியில் மக்களிற்கு எடுத்துச் செல்லும் வகையில் மாவட்டம் சார்பில் குழுக்களை அமைத்துச் செயல்படுவதோடு த.ம.பேரவையின் செயல்பாட்டினை முன்னெடுப்பதற்காக பேரவையின் செயற்பாட்டுக் குழுவின் 5 உறுப்பினர்களை 9 ஆக அதிகரிப்பது. தற்போதுள்ள ஐவரில் ஒருவரான அலன் நிதி மோசடி தொடர்பில் விலக்கப்பட்டதனால் புதிதாக மேலும் ஐவர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இதில் சுரேஸ் பிறேமச்சந்திரன் , க.குமார் உள்ளிட்ட ஐவர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இதேவேளை பேரவையின் உறுப்பினராகவிருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் 5,2,1 லட்சமாக மூவரிடம் மொத்தம் 8 லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட நிலையில் 2 லட்சம் ரூபா தனிப்பட்ட முறையிலேயே வாங்கியதாக தெரிவித்திருந்த நிலையில் 5 லட்சம் ரூபா பெற்றவரிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா மட்டும் இதுவரை வழங்கியுள்ளார். எனவும் தெரிவிக்கப்பட்டது. இச் சந்திப்ஙின் நிறைவில் வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் உறவுகளைச் சந்தித்து வெளியேறினர்.