இலங்கையின் பல மாவட்டங்களின் வெப்பநிலை ஐந்து பாகை செல்சியசால் அதிகரித்துள்ளது தாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்கள் காணப்படுகின்ற அதிக வெப்பம் காரணமாக அதிகமாக நீர் அருந்துமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சமிந்த சமரகோண் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேடமாக அதிக வெப்பம் காரணமாக சரீரத்தின் செயற்பாட்டிற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தோல் நோய் ஏற்படும் ஆபத்துக்கள் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடக் கடுமையான அதிக வெப்பமான நேரத்தில் எங்காவது பயணம் மேற்கொண்டு வீட்டிற்கு வருகைத்தந்ததன் பின்னர் நீரில் கழுவ வேண்டும்.
இந்த காலப்பகுதியில் வேகமாக பரசும் இன்புளூயன்சா, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்களில் இருந்து அவதானமாக இருக்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
விசேடமாக அதிக மக்கள் கூட்டம் உள்ள இடத்தில் இருப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.