இன்று வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளிற்காக அவசர இலக்க பயன் பாட்டிற்காக 2016ம் ஆண்டில் கோரிய 3 நோயாளர் காவு வண்டிகள் உரிய மாவட்டங்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளிற்காக அவசர இலக்க பயன் பாட்டிற்காக 2016ம் ஆண்டில் கோரிய 3 நோயாளர் காவு வண்டிகள் உரிய மாவட்டங்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளது. அதாவது வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட அவசர நோயாளர் காவு வண்டித் திட்டத்தின் கீழ் தற்போது வட மாகாணத்திலும் உள்ள மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளின் பயன் காட்டிலும் உள்ள நோயாளர் காவு வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
இச் சேவைக்காக தற்போது மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மொத்தமாக 127 நோயாளர் காவு வண்டிகள் உள்ளது. இதிலர 97 காவு வண்டிகளே இயங்குகின்றன. தற்போது வழங்கும் நோயாளர் காவுவண்டிகளுடன் இயங்கும் நோயாளர் காவு வண்டிகளாக 100 நோயாளர் காவு வண்டிகள் சேவையில் இருக்கும். இதேநேரம் குறித்த 3 நோயாளர் காவு வண்டிகளும் குறித்த மாவட்டங்களிற்காக 2016ம் ஆண்டின் நிதியில் மாவட்டங்களிற்குப் பங்கீடு செய்து எம்மால் வழங்கப்பட்ட நிதியில் அவர்கள் நோயாளர் காவுவண்டிக்காக ஒதுக்கீடு செய்திருந்தனர்.
அவ்வாறு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட மாகாண நிதியில் இருந்தே குறித்த 3 நோயாளர் காவு வண்டிகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் இவை மாகாண நிதியில் கொள்வனவு செய்த பெருமைக்குரிய காவு வண்டிகளாகும். இதேவேளை தற்போது மாகாணத்தில. உள்ள 127 நோயாளர் காவு வண்டியின் சாரதிகள் உதவியாளர்களாக பணியாற்றும் 254பேரில் முதல் கட்டமாக 160 பேருக்கு காவு வண்டிகளில் நோயாளர் ஏற்றப்பட்டதில் இருந்து வைத்தியசாலையில் சேர்க்கும் வரையில் செயல்படவேண்டிய முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சியினை பிரித்தானியாவில் இருந்து வந்த ஓர் வைத்தியக் குழுவினர் எமது நாட்டு வைத்தியர் குழுவிற்கு வழங்கினர். அவ.வாறு பயிற்சி பெற்ற எமது வைத்தியக்குழுவினரால் எமது நோயாளர் காவு வண்டி ஊழியர்களிற்கு மேற்படி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு எமது வைத்தியர் குழுவிற்கு பயிற்சி வழங்கிய பிரித்தானியக் குழுவினரும் எமது அமைச்சில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றனர். என்றார். –