பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் தடை!!வாழை இலைக்குபெரும் தட்டுப்பாடு..
தென்மராட்சி பிரதேசத்தில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் வாழை இலைக்குபெரும் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள் சிற்றுண்டி நிலையங்களில் வாழை இலை மற்றும் தாமரை இலை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதுவரை காலமும் பொலித்தீன் தாள்கள் பயன்படுத்திய வர்த்தக நிலையங்கள் தற்போது அவற்றின் பாவனையைக் கைவிட்டு உணவுகள் வழங்குவதற்க இலை வகைகளைப் பயன்படுத்துவதாலே தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் தெரிவித்தானர்.
இந்த நிலையில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதால் பணியாளர்கள் உணவுகள் கொண்டு வருவதற்கு வாழை இலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சந்தையில் வாழை இலை கிடைப்பதில்லையெனவும் தெரிவித்தனர்.மேலும் பாடசாலை மாணவர்கள் பிளாஸ்ரிக் போத்தல்களில் குடிநீர் கொண்டு வருவது பாடசாலை நிர்வாகங்களினால் தடை செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் குடிநீர் பாடசாலைகளுக்குக் கொண்டு செல்வதில்லை எனவும் தெரிவித்தனர். குறிப்பாக முன்பள்ளிச் சிறார்களுக்கு மென்பானங்களை போத்தல்களில் அடைத்து பெற்றோர் கொண்டு வந்து வழங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது