கிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்த தர கோருகிறார் கிளிநொச்சி அரசதிபர்..
முறிகண்டிக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் ஏற்படும் அதிக விபத்தினைத் தடுக்கும் வகையில் ஏ9 வீதிக்குச் சமாந்தரமானதாக மற்றுமோர் புதிய பாதை அமைக்கும் மாற்றுத் திட்டத்திற்கு நிதி வழங்குமாறு மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
ஏ9 பாதையில் இடம்பெறும் விபத்துக்களை குறைத்து நகரின் மத்தியில் ஏற்படும் நெருக்கடிகள் மற்றும் போக்குவரத்து நெருக்கடிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு மாற்றுத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது கடந்த 2003ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஓர் திட்டம் இடை நடுவில் கிடப்படது கண்டறியப்பட்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட திட்டம்தான் முறிகண்டியில் இருந்து பரந்தன் வரைக்குமான மாற்றுப்பாதை அமைக்கும் திட்டமாகும்.
இவ்வாறு அமைக்கப்பட திட்டமிடப்பட்ட மாற்றுப்பாதையாக ஏற்கனவே சுமார் 50 அகலத்தில் முறிகண்டியில் இருந்து மிகத்தரமான பாதை அளவு ஒன்று உள்ளது. அது தற்போது சாதாரண பாதையாகவும் உள்ளூர்ப் பாதையாகவும் பயன்பாட்டில் உள்ளது. இப்பாதையை மிகத் தரமாக செப்பனிட்டு தார் படுக்கை வீதியாக புனரமைப்புச் செய்வதன் மூலம் யாழில் இருந்து வவுனியாவிற்கும் வவுனியாத் திசையில் இருந்து யாழிற்கும் நேராகப் பயணிக்கும் வாகனங்களோ அல்லது ஏனைய வாகனங்களோ மாற்றுப் பாதையூடாக பயன்படுத்த முடியும்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக மக்கள் வாழும் பாரதிபுரம் , கிருஸ்ணபு்ம் , அறிவியல் நகர் உள்ளிட்ட பகுதிகளும் நீண்ட காலமாகவே போதிய அபிவிருத்தி காணாமலேயே கானப்படுகின்றன. இவ்வாறான திட்டங்களின் மூலம் குறித்த பகுதியில வாழும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்த முடியும் எனத் திட்டமிடப்பட்டது. எனவேதான் குறித்த பகுதியின் சுமார் 18 கிலோ மீற்றர் பாதையினையும் தரமாக அமைப்பதற்கு எட்டியுள்ளோம்.
இப்பாதையின் அருகிலேயே விவசாய பீடம் , பொறியியல்ப் பீடம் என்பவற்றோடு ஆடைத் தொழிலகம் உட்பட அணைத்து முக்கிய மையங்களும் உள்ளடக்குகின்றன. இதனால் இப்பாதையினை முழுமையாக புனரமைக்கும் திட்டமொன்றினை தயாரித்து பி்தமர் செயலகத்தில் செயலாளர் பாஸ்கரலிங்கம் தலமையில் இடல்பெற்ற கலந்துரையாடலில் சமர்ப்பித்துள்ளோம். இத் திட்டத்தின் முக்கியத்துவம் அதற்கு தேவைகள் தொடர்பில் கேட்டறிந்த்தோடு அதனை நடைமுறைப்படுத்தவும் தற்போது கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதானால் இதற்காக 500 மில்லியன் ரூபா தேவையென கண்டறியப்பட்டுள்ளதனால் ஒரேதடவையில் திட்டத்தினை நடைமுறைப்படுத்தாக இரு கட்டமாக முன்னெடுக்கவும் எண்ணினோம் . எனவே திட்டத்தினை இரண்டாகப் பிரித்து முறிகண்டியில் இருந்து கனகபுரம் வரையில் முதல் கட்டமாகவும் அடுத்த கட்டமாக கனகபுரத்தில் இருந்து பரந்தன் வரையிலுமாக பிரித்து முன்னெடுக்க திட்டலிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் முதல் கட்டப் படிக்காக 250 மில்லியன் ரூபா கோரியுள்ளோம்.
அதற்குரிய பணம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமையினால் நிதிக்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும். அதேநேரம் ஒரே தடவையில் இப்பணியை மேற்கொள்வதானால் 500 மில்லியன் ரூபாத் திட்டத்திற்கு பெரிய ஒப்பந்த கார்ர்கள் மட்டுமே விண்ணப்லித்திருக்க முடியும் ஆனால் தற்போது திட்டம் இரு பகுதியாக பிரிக்கப்பட்டமையினால. உள்ளேரில் உள்ள ஒப்பந.த கார்ர்களும் அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். இத் திட்டத்தினை வெற்றிகரமாக முடிக்கும் சந்தர்ப்பத்தில் ஏ9 வீதியில் இப்பகுதியில் இடம்பெற்ற அநாவசிய உயிரிழப்புக்கள் தடுக்கப்படுவதோடு குறித்த பிரதேசத்தின் கிராமங்களும் முன்னேற்றமடையும் ஒரே திட்டத்தில் இத்தனை நன்மைகளையும் எட்டும் வகைநிலேயே மேற்படி திட்டம் முன்மொழிந்து அதற்கான அனுமதியும் கிடைக்கும் சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளது. என்றார். –