யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக விஞ்ஞான பீட இன்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அவர் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

ஜனாதிபதியால் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்ட நிலையில் இப் பதவியேற்பு விழா இடம்பெற்றுள்ளது.
இப்பதவி ஏற்பு நிகழ்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பமானதுடன் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் உட்பட மாணவர்கள் பாதுகாப்பு ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதுவரை காலமும் யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும்இ புதிய துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துணைவேந்தர் தெரிவில் முன்னிலை வகித்த மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மேலும் துணைவேந்தர் நியமனத்தில் பல்வேறு தலையீடுகளும் அரசியல் அழுத்தங்களும் காணப்படுவதாக விமர்சிக்கப்பட்டு நியமனத்தில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில்இ பேராசிரியர் விக்னேஸ்வரன் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.