காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்ட அகதிகள்மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்…

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்ட அகதிகள்மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்…

இந்தியாவில் இருந்து அயல் நாடு ஒன்றிற்கு தப்பிச் சென்றுகொண்டிருந்த 30 பர்மியர்களும் 2 படகோட்டிகளும் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடப் ஒப்படைக்கப்பட்டனர்.
பர்மாவில் இடம்பெரும் யுத்தம் காரணமாக 5 ஆண்டுகளிற்கு முன்பு இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த நிலையில் இந்தியாவில் யு.என.எச்.சீ.ஆரினால் பராமரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பராமரிக்கப்படுபவர்களை இந்திய அரசு நாட்டினை விட்டு வெளியேறுமாறு பணித்து வருவதனால் தாம் மீண்டும் பர்மாவிற்கே செல்லவேண்டி ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இந்தியாவில் இருந்து தப்பி வேறு ஒரு நாட்டிற்குச் செல்லும் நோக்கில் குறித்த 30 பேரும் இந்தியக் கடற்கரையில் மறைந்திருந்துள்ளனர்.
இவ்வாறு மறைந்திருந்தவர்கள் இந்திய மீன் பிடிப்படகினை அவதானித்து அவர்களின் உதவியுடன் படகில் தப்பிச் சென்றுகொண்டிருந்த சமயம் இலங்கை கடற்பரப்பில் கடற்படையினரிடம் அகப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகினில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 30பேர் உள்ளனர். அவ்வாறுள்ள 30 பேரில் 14 பேர் சிறுவர்களாக காணப்படுகின்றனர்.

 


இவ்வாறு சிறுவர்கள் 14பேர் கானப்படுவதோடு மேலும் அதிகமானோர் பெண்களாகவே கானப்படுகின்றனர். பர்மாவில் தற்போது பெண்களிற்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் காரணமாக தமக்கு மீண்டும் பர்மாவிற்குச் செல்ல அச்சமாகவுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் காங்கேசன்துறைப் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டதனையடுத்து மருத்துவப் பரிசோதனைகளின் பின்பு இன்றைய தினம் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்பட்டுள்ளனர்..