பொலிஸ் சேவையில் இணைந்து சேவையாற்ற தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும் என்று வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று காலை 7:50 மணியளவில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கான வீதிப்போக்குவரத்து அங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
பொலிஸ் சேவையில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுகிறது எனவே எமது மக்களுக்கு சேவையாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வேண்டுகோள்கள் விடுத்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட வீதிப்போக்குவரத்து பொலிசாரால் வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பாடசாலை மாணவிகளுக்கு போக்குவரத்து அங்கிகள் அதிபர் ஆசிரியர்களால் அணிவிக்கப்பட்டன.
நிகழ்வில் கல்லூரியின் அதிபர் வேனுகா சண்முகரத்தினம் , உப அதிபர் , ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.