உத்திர பிரதேசத்தில் ஒரு பெண்ணை 6 ஆண்கள் சேர்ந்து அடித்தே மயக்கமடைய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் பாக்பட் என்ற இடத்தில் 40 வயது பெண்ணை பணப்பிரச்சனை காரணமாக 6 ஆண்கள் சேர்ந்து அடித்துள்ளனர்.
இதில் அந்த பெண் சுயநினைவை இழந்து கிழே விழுந்துள்ளார்.
அதன் பின் அவர்கள் மேல் பொலிசாரில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் அந்த பெண் மாட்டுற்கு தீவனம் வாங்கும் கடையில் கடன் வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.