இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் அலெக்ஸ் காரே களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே புவனேஷ்வர், ஷமி வேகத்தில் தடுமாற்றத்துடன் ஆட ஆரம்பித்த நிலையில், கடந்த போட்டியை போலவே அதே 6 ரன்களுக்கு பின்ச் புவனேஷ்வர் பந்துவீச்சில் போல்டனார். அவரை தொடர்ந்து அலெக்ஸ் காரே வும் (18 ரன்) டாப் எட்ஜில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய மார்ஷ் அதிரடிக்கு ஆடி, ஒருநாள் தொடரில் 7-வது சதம் எட்டினார். ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். மேக்ஸ்வெல் 48 ரன்னிலும், ரிச்சர்ட்சன் 2 ரன்னிலும், சிடில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலி அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 43 ரங்களுக்கு ஆட்டமிழக்க, தவானும் 32 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து, விராட் கோலியுடன், தல தோணி களமிறங்கியதும் மைத்தாமே ஆரவாரம் செய்தது.
அதுவரை பொறுமையாக ஆடிய கோலி அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்து மனிதனை அதகள படுத்தினார். இருவரும் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று உள்ளனர். தற்போது வரை இந்திய அணி, 43 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட் இழப்புகளுக்கு 228 ரன்கள் எடுத்து உள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 70 ரன்கள் தேவை. தற்போது களத்தில் கோலி 100 ரன்களுடனும், டோனி 17 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.