ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றில் இலங்கை தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
39 வயதான நவநீதன் என்பவர் ஜேர்மனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் அரச தலைவர்களை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பிலான விபரங்களை தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிட ஜேர்மன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் இவருக்கு தொடர்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில அரசியல் தலைவர்களை கொலை செய்ய இவர் முயற்சித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.