யாழில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீர் ஏற்றம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் நேற்றுச் சடுதியாக அதிகரித்துக் காணப்பட்டன.
சித்திரைப் பௌர்ணமி மற்றும் ஆலயங்களில் இடம்பெறும் வருடாந்தத் திருவிழாக் களால் மக்கள் கூடுதலாக மரக்கறி பாவனையிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணத்தால் சித்திரைப் பௌர்ணமி தினமான நேற்று மரக்கறி வகைகள் சடுதியாக அதிகரித்தன.
திருநெல்வேலி, மருதனார்மடம், சுன்னாகம், சங்கானை போன்ற சந்தைகளில் மரக்கறி வகைகள் போதியளவு வந்தாலும் அவை உடனடியாக விற்று தீர்ந்தன.
சகல மரக்கறி வகைகளும் கிலோ 150 ரூபாவுக்கு மேல் விற்கப்பட்டன. இந்த மரக்கறி விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்பட்டனர். அனேகமான இடங்களில் மரக்கறி வகைகளுக்குப் பற்றாக்குறையும் நிலவின. கூடுதலாக பயிற்றங்காய், பாவற்காய்க்கு இந்த பற்றாக்குறை ஏற்பட்டுக் காணப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.