ஆசிரிய வெற்றிடத்தை நிரப்ப நேர்முகத் தேர்வு!!
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் உள்ள கணித, விஞ்ஞானப் பாடங்களின் ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு எதிர் வரும் 25ஆம், 26ஆம் திகதிகளில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணப் பாடசாலை களில் நிலவும் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடம் தொடர்பான விவரங்கள் திரட்டப்பட்டன. 418 வெற்றிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றை நிரப்புவதற்கான அனுமதி மத்திய அரசிடம் கோரப்பட்டது. மத்திய அரசு அனுமதி வழங்கியது. கடந்த பெப்ரவரி மாதம் ஒரு மாத கால அவகாசத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 284 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்தன. வெற்றிடம் அதிகமாகக் காணப்பட்டதால் பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் விண்ணப்பிக்கும் காலத்தை நீடித்தோம்.
விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் அளிக் கப்பட்டு மீண்டும் விளம்பரம் பிரசுரிக்கப் பட்டது. இந்தக் காலத்தில் மேலும் 68 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மொத்தமாக தற்போது 352 பட்டத்தாரிகள் விண்ணப்பித்துள்ளனர். எமது மாகாணத்துக்குத் தேவையான எண்ணிக்கையை அடைய 66 விண்ணப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
குறைந்தளவானோர் விண்ணப் பித்தமையால் போட்டிப் பரீட்சையின்றி நேரடியாகவே நேர்முகத் தேர்வு நடத்துவதற்கு எண்ணியுள்ளோம். நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் – என்றார்.