தமிழகத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் சொந்த மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம், பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். 35 வயதான இவர் லோடு மேனாக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு விடுமுறை என்பதால், அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனைவியும் வேலைக்கு சென்று விட, அவரது தந்தை சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது போன்று அவர் மனைவி இல்லாத போது சிறுமியிடம் எல்லை மீறி நடந்துள்ளார்.
இதையடுத்து சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதால், தாய் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தாயிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன, அவர் இதற்கு யார் காரணம் என்று கேட்க சிறுமி தந்தை தான் அனைத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
அதன் பின் மருத்துவர்கள் அருகிலிருக்கும், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததால், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.