மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.
பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 52 ஆண்களும் 3 பெண்களும் மற்றும் 5 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்களிடம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் , அவர்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கடந்த ஜனவரி 24ம் திகதி 72 பேருடன் சிலாபத்தில் இருந்து ஆழ்கடல் படகொன்றில் குறித்த நபர்கள் ரியூனியன் நோக்கி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.