பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் மீது காதல் வயப்பட்ட 60 வயது மாமனார் அதற்கு இடையூறாக இருந்த மகனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜ்விந்தர் சிங் என்பவருக்கு ஜஸ்வீர் கவுர் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ராஜ்விந்தரின் தந்தை சோட்டா சிங் தனது மருமகள் மீது காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதன் காரணமாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், தந்தை சோட்டா சிங் கூர்மையான ஆயுதத்தால் தனது மகனை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி கழிவுநீர் தொட்டியில் போட்டுள்ளார்.
மருமகள் மற்றும் மாமனார் பற்றிய தவறான நட்பு அருகில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்த காரணத்தால் சந்தேகத்தின் அடிப்படையில் உறவினர் ஒருவர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, மாமனாரின் விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.