தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க

பெண்கள் முகத்திற்கு அடுத்ததாக தலைமுடிக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

இந்த காலக்கட்டத்தில் கெமிக்கல் நிறைந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தி வந்ததில், தலைமுடியின் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும்.

முடி உதிர்வு, பொடுகு, முடி வெடிப்பு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லுமே தவிர குறையாது. இதற்கு நாம் மீண்டும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தலைமுடிக்கு ஊட்டம் வழங்குமாறான சில நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகளை அவ்வப்போது போட வேண்டும்.

அந்தவகையில் இதற்கு முட்டை சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.

தற்போது முட்டையினை வைத்து தலை முடியின் ஆரோக்கியத்தை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.

தேவையானவை

  • 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  • 1 முட்டையின் வெள்ளைக்கரு

செய்முறை
முதலில் ஆலிவ் ஆயிலுடன் முட்டையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

இறுதியாக நன்றாக அலசவும். இவ்வாறு செய்வதனால் முடிக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் அள்ளி தரும்.

இந்த ஹேர் மாஸ்க்கைப் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • இந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க்கில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு போட்டு வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.
  • இந்த ஹேர் மாஸ்க் தலைமுடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு உதவி, முடி வெடிப்புகள் ஏற்படுவதைக் குறைக்கும்.
  • முடி மிகுந்த வறட்சியுடன் இருந்தால், இந்த ஹேர் மாஸ்க்கைப் போடுங்கள். இதனால் அதில் உள்ள ஆலிவ் ஆயில் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஒன்றாக வேலை செய்து, முடியின் வறட்சியைத் தடுத்து, அதன் மென்மைத்தன்மையை அதிகரிக்கும்.
  • ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை மாஸ்க் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படும் முடியின் பொலிவுத்தன்மையை அதிகரித்து, தலைமுடியை அழகாக வைத்துக் கொள்ள உதவும்.
    அடிக்கடி பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவராயின், இந்த மாஸ்க்கை போடுங்கள். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள வறட்சி குறைந்து, பொடுகு வருவது தடுக்கப்படும்.
  • இந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டி, நீளமான மற்றும் அடர்த்தியான முடியைப் பெற உதவும்.
  • முட்டை வெள்ளைக்கரு மற்றும் ஆலிவ் ஆயில் கலவை ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதைக் கட்டுப்படுத்தி, தலையில் இருந்து அசிங்கமாக எண்ணெய் வழிவதைத் தடுக்கும்.