சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்வது குறித்து பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு நடிகையான பவானி ரெட்டி தற்போது தமிழ் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். அவரும் சின்னத்திரை நடிகர் ஆவார்.
திருமணம் ஆகி எட்டு மாதத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார் பிரதீப்.
இந்நிலையில் பவானி இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். என்னைப் புரிஞ்சிக்கிட்ட ஒருவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போகிறேன். என் கணவர் பிரதீப்புக்கும் எனக்கும் நெருக்கமான நண்பர். அவர் பெயர் ஆனந்த்.
அவரும் இதே மீடியா துறையில்தான் இருக்கிறார். இந்த உலகம் என்ன செய்தாலும் பேசிக்கிட்டே தான் இருக்கும். இது பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் இந்த திருமணத்தை செய்துகொள்ளப்போகிறேன் என கூறியுள்ளார்.