வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், ஆபாச வீடியோவை அனுப்பிய இளம்பெண் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனிவாசகம். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிரீத்தி பழனிவாசகத்திடம் இரண்டரை லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.
நீண்ட நாட்களாகியும், பழனியிடம் வாங்கிய காசை திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். பழனி தனது காசை திரும்பி தரும்படி பிரீத்தியுடம் கேட்டுள்ளார். அதற்கு பிரீத்தி தனது ஆபாச புகைப்படங்களையும், வீடியோவையும் பழனிவாசகத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து பழனிவாசகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் போலீஸார், பிரீத்தி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.