சொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா? இதை பார்த்து எங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள், அப்போது என்ன செய்கிறீர்கள் பார்க்கலாம்..
இவ்வாறு முல்லைத்தீவு மக்கள் ஆவேசத்துடன், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கோசம் எழுப்பினார்கள். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பய ணமாக வடக்குக்கு வந்திருந்தார்.
இறுதி நாளான நேற்றுமுன்தினம் முல்லைத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துகாணி மீட்புக்காகப் போராடி வரும் கேப்பாபிலவு மக்கள், காணாமல் ஆக் கப்பட்டோரைத் தேடும் அவர்களது உறவினர்கள் ஆகியோர்
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பொலிஸார் தலைமை அமைச்சரின் வாகனத் தொடரணியை போராட்டக்காரர்கள் நெருங்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு’, ‘எமது நிலம் எமக்குச் சொந்தம், எமது கடல் எமக்கு வேண்டும், எமது வளம் எமக்கு வேண்டும்’ என்று மக்கள் கோசமெழுப்பினர். எங்களு டைய நிலத்தில் இருந்து எமது வாழ்வாதாரங்களை இராணுவம் எடுத்து உண்ணும்
போது நாங்கள் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருப்பது? நாங்கள் இந்த வீதியில் காய்கின்ற தைப் பார்த்து எமது பிள்ளைகள் பிரபாகரனைப் போன்று இன்னொரு வடிவம் எடுப்பதற்குத்தான் இந்த அரசு ஏற்பாடு செய்கிறது. எங்களுடைய வீடு, பூமி, காடு எல்லாற்றையும் நாங்கள்
அடுத்த சமுதாயத்துக்கு விட்டுச் செல்லவேண்டும். அதற்குத்தான் நாங்கள் இந்த இடத்தில் இருந்து இவ்வளவு பாடுபடுகிறோம். ஒருநாள், இரண்டுநாள், ஒருவருடம், இரண்டு வருடம் என்று இப்போது மூன்றாவது வருடமாகின்றது.
எங்களுடைய பிள்ளைகள் ஆகப் பேயராய் வாழமாட்டாங்கள். அடுத்த தலைமுறை இந்தப் பிரச் சினைய எந்தவழியில தீர்க்க வெளிக்கிடுதோ? எங்களுடைய பிரச்சினையைத் தீர்க்கிறது உங்க ளுக்கு நல்லது என்று பட்டால் எங்களுடைய பிரச்சினையைத் தீர்த்து,
முடித்து வையுங்கள். அல் லது அடுத்த சந்ததிதான் இதைத் தீர்க்க வேண்டும் என்றால் அது எங்கு போய் முடியும் என்று எங் களுக்குத் தெரியாது என்று மக்கள் தெரிவித்தனர். மேலும் நாங்கள் அணுவணுவாகா சாவதைவிட போராடும் எல்லோரையும் ஒரேயடியாக
அரசு சாக்காட்டட்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.