இந்தியாவில் 21 வயது இளைஞருடன் 40 வயது பெண் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்ததால், தற்போது இது தற்கொலையில் போய் முடிந்துள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் இருக்கும் நடுப்பாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மலர்.
40 வயதான இவர் சிறு வயதிலே வேலைக்காக சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கு சென்ற பின் பார்வையற்ற கண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
மலர் நந்தம்பாக்கத்தில் இருக்கும் பகுதியில் சமீபகாலமாக வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டம் ஆலையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு ஆனந்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு வயதுக்கு முறைவற்ற உறவை தவிர்த்துவிடும் படி பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மலர் திடீரென்று அரளிவிதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த ஆனந்த் அவரை உடனடியாக மீட்டு அருகில் இருக்கும் மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர். இருப்பினும் மலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் ஆனந்தை விசாரணைக்காக காவல் நிலையம் வரும்படி அழைத்துள்ளனர். பயந்துபோன ஆனந்த், விஷமருந்தி விட்டு காவல் நிலையம் சென்றார்.
அங்கேயே மயங்கி விழுந்தார் அவரை போலீசார் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்களன்று ஆனந்த் உயிரிழந்தார்.
திருமணத்தை மீறிய உறவால் வாழ வேண்டிய இரண்டு பேர் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.