முள்ளிவாய்க்கால் நிகழ்வில் குழப்பம்! ஊடகவியலாளரறை தாக்கிய சக ஊடகவியலாளர்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் நிகழ்வுகளில் குழப்பம் விளைவிக்க முயன்ற ஊடகவியலாளர் மற்றொரு ஊடகவியலாளரால் தாக்கப்பட்டார்.
இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இடம்பெற்ற போது நினைவுப் பேருரை எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் நிகழ்திக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட ஊடகவியலாளர் “பாராளுமன்றதில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது” என்று கூறினீர்களே அதற்கு என்னபதில் என கேள்வி எழுப்பி குழப்பம் விளைவிக்க முயன்றார். மேலும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் உரையை பதிவுசெய்துகொண்டு நின்ற சக ஊடகவியலாளருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தியவண்ணம் நின்றார்.
இதனால் சக ஊடகவியலாளர் ” இது அரசியல் மேடை அல்ல உங்கள் தனிப்பட்ட கேள்விகளை தனிமையில் வைத்து கேளுங்கள்” என்றார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாற பின்னர் ஏனைய ஊடகவியலாளர்களால் தடுக்கப்பட்டது.