ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமாகியுள்ளார்.
இவர் சிறுநீரக செயலிழப்பால் தனது 60ஆவது வயதில் டெல்லியில் இன்று காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சாமியார் சந்திரசாமியை ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தியை படுகொலை செய்து தப்பியோடிய சிவராசன் குழுவினருக்கு அடைக்கலம் கொடுத்து ரங்கநாத் என்பவர் 26ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
ஆனால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாமியார் சந்திரசாமி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக ரங்கநாத் சோனியாவிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் அப்போது ஆட்சி மாறியதால் ரங்கநாத்தின் புகார் விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.