மூலோபாய நகரமாக மாற்றமடையவுள்ள யாழ்ப்பாணம்!
எதிர்கால நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தை மூலோபாய நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதற்காக திட்டம் ஒன்றை தயாரித்து இந்த வருடத்தில் செயற்படுத்தவுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு சுயாதீன அமைப்புகள் மற்றும் பல்வேறு மக்களின் கருத்துகளை அறிந்து கொள்ள நேற்று மூலோபாய நகர திட்டத்தின் யாழ் பிரதிநிதிகளை அமைச்சர் சந்தித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணத்தை பல்வேறு மூலோபாய நகரமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்.
நாட்டில் நிலவிய போர் காரணமாக யாழ்ப்பாண நகர அபிவிருத்திக்கு பாரிய தடைகள் ஏற்பட்டது. 1980ஆம் ஆண்டின் பின்னர் நகரத்தில் இயற்கை வளர்ச்சி முழுமையான தடைப்பட்டதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.