முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் விவ­காரம் நாளை முன்­னெ­டுக்க இருந்த நாடு­ த­ழு­விய ஹர்த்தால் ரத்து

முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் விவ­காரம் நாளை முன்­னெ­டுக்க இருந்த நாடு­ த­ழு­விய ஹர்த்தால் ரத்து

(எம்.எம்.மின்ஹாஜ்)

முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்­பினால் நாளை வியா­ழக்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருந்த நாடு­ த­ழு­விய ரீதியிலான ஹர்த்தால் ரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சிவில் அமைப்­புகள் உலமா சபையை நேற்று இரவு சந்­தித்த பின்னர் ஹர்த்தால் ரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் தாக்­கு­தல்­களை கண்­டித்து நாளை ஹர்த்தால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருந்­தது. இதனை முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

எனினும் நேற்று இரவு அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உல­மா­வுடன் நடத்­தப்­பட்ட சந்­திப்பை அடுத்து குறித்த ஹர்த்தால் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

எனினும் வெள்­ளிக்­கி­ழமை வரை இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வின்றேல் ஹர்த்­தா­லுக்கு செல்ல வேண்டி ஏற்படும் என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்துள் ளது.