கடுமையான மழை வீழ்ச்சி : வானிலை அவதான நிலையம் புது தகவல்
அதிகரித்த மழை வீழ்ச்சியின் அளவு தற்போது குறைவடைந்துள்ளதாகவும் தென்மேற்கு பகுதி மற்றும் நாட்டின் சிலப் பகுதிகளில் மாத்திரம் பருவ மழையுடன் காற்று வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த 21 மணித் தியாலங்களில் சப்ரகமுவ மாகாணத்திலேயே கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு இரத்தினப்புரியில் 68.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும் சப்ரகமுவ, மேல், தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டின் சிலப்பகுதியில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் காற்று மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் மழை பெய்யும் நேரங்களில் காற்றின் வேகம் மேலும் அதிரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மின்னல் தாக்குதல்களிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோரங்களில் இடியுடன் மழை பெய்யும் என்பதோடு அதிகரித்த காற்றும் வீசும். எனவே மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள