நாட்டில் இருந்த அடக்குமுறை ஆட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ….
நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்டிருந்த அடக்குமுறை ஆட்சியானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது ஏற்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்புக்களை பயன்படுத்தி பெண்கள் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த கால யுத்தத்தின் காரணமாக இன்றும் கூட நாம் அதன் வடுவில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றோம். கடந்த ஆட்சிக் காலமானது அடக்குமுறையான ஆட்சிக் காலமாகும். அவ் ஆட்சிக் காலத்தில் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்ததுடன் கொலை கொள்ளை கப்பம் என நாடு சீரழிந்திருந்தது. சாதரணமாக ஒரு நிகழ்வை நடாத்துவதானால் கூட அன்று ஆட்சியாளர்களோது சேர்ந்து இயங்கியவர்களே மேற்கொள்வார்கள்.
அத்தகைய ஆயுதக்குழுக்களின் கட்டுபாட்டிலேயே பிரதேச சபைகள் கூட காணப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் தற்போது அந் நிலமையானது மாற்றப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டில் ஒற்றுமையான ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையை யன்படுத்தி பெண்கள் தமது பிரதிநித்துவத்தை அதிகரித்துகொள்ள வேண்டும். பல பெண்கள் திறமைகள் இருந்தும் அதனை வெளியே கொண்டுவர முடியாமல் உள்ளார்கள. ஆனாலும் பெண்களது பிரதிநித்துவத்தை அதிகரிப்பதில் பல பிரச்சனைகள் உண்டென்பதும் உண்மையே. குறிப்பாக பெண்களது பிரதித்துவமானது கட்சியிலேயே புறக்கணிக்கப்படுகின்றது. அவற்றைவிட பெண்களுக்கு நிதிப் பிரச்சனை உள்ளது. பக்க பலம் குறாவாகவுள்ளது. போன்ற பிரச்சனைகள் பெண்கள் பிரதிநித்துவத்தை அதிகரிப்பதில் உள்ளன.
தற்போது எமது பிரதமர் மாவட்டத்திற்கு 25வீதம் பெண்கள் என்ற கோட்டா முறையை கொண்டுவந்து அதனை பாராளுமன்றித்தில் நிறைவேற்றியுள்ளார். இதனை பயன்படுத்தி பெண்கள் தமது பிரதிநித்துவத்தை அதிகரித்துகொள்ள வேண்டும்.
மேலும் நமக்கான தீர்வு திட்டத்தை நாம் பெற்றுகொள்ள வேண்டும். அதற்காக பலர் இன்று குரல்கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களது அக் குரலானது வீணாக போய்விடக்கூடாது.அதற்கான பயன் கிடைக்க வேண்டும் நிச்சயமாக கிடைக்கும். அதேபோன்று அபிவிருத்தியும் ஏற்படுத்த வேண்டும்.
இதேவேளை தற்போது தென்னிலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதே போன்றே அன்று கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் எமது பல்லாயிரக்கனக்கான உறவுகள் கொல்லப்பட்டிருந்தார்கள். அது எமது உயிர் இருக்கும் வரை எம்மிடமிருந்து அழிக்க முடியாத ஒரு வலியே. அதனை செய்தவர்களுக்கு இறைவன் தண்டனை கொடுக்க தொடங்கிவிட்டான். எனினும் இவ் அனர்த்திற்கு இந்தய அரசாங்கம் உதவிப் பொருடகளை வழங்கியுள்ளது. அதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.