பிக்பாஸ் வீட்டில் இன்று எவிக்ஷன் மூலம் சாக்ஷி வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சாக்ஷி கவின் மீதான காதல் பிரச்சனையால் அதிகளவு மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
இந்நிலையில், கடந்த வாரமே சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரேஷ்மா வெளியேற்றி அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் பிக்பாஸ்.
இந்நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு சாக்ஷி வெளியேறியுள்ளார். அவர் வெளியேறும் போது ஷெரின் நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் என கட்டியனைத்து அழ ஆரம்பித்தார்.
பின்பு, ஒவ்வொருவராக கட்டியனைத்து, விடை பெற்றார் சாக்ஷி. ஆனால் கவின், மற்றும் லோஸ்லியாவை சாக்ஷி கண்டுகொள்ளவே இல்லை.
கடைசியாக, சேரனை பார்த்து கட்டியணைத்து ஆறுதல் சொன்ன போது, அவர்கள் அருகில் இருந்ததால், இருவரையும் கட்டியணைத்து Bye சொன்னார். ஆனால் உண்மையில் பார்த்தால் ஷாக்சிக்கு EGO இருந்தது அழகாக தெரிந்தது.