2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
அதே பாடசாலையை சேர்ந்த மைத்திரி அனுருத்திரன் 193 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தனை பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி மேரி றொஷாந்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட வெட்டுப்புள்ளி 155ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2017 புலமைப்பரிசில் பரீட்சையில் 216 மாணவர்கள் தேற்றியதாகவும் அவர்களில் 120 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சிததியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு பாடசாலை கல்வியினை வீட்டில் சென்று மீட்டு படித்தாலே பரீட்சையில் நல்லபெறுபேற்றினை பெறமுடியும் எனவும் தெரிவித்தார்
யாழ்ப்பாணமாவட்டத்தில் புலமை பரீட்சையில் மாவட்ட மடடத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவி ஊடகங்களுக்க கருத்த தெரிவிக்கையில் தாண் எந்தவொரு தனியார் கல்வி நிலையத்திற்கும் சென்று கல்விகற்கவில்லை எனவும் பாடசாலை கல்வியை பயின்றே பரீட்சை எழுதி சித்தியெய்தியதாகவும் தெரிவித்தார்.இனிவரும் காலங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாடசாலையில் படிக்கும் பாடங்களை வீட்டில்மீண்டு படிப்பதன்மூலம் நல்லபெறுபேற்றினை பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை மாவட்ட மட்டத்தில் 2ஆம் இடத்தினை பெற்றமாணவி கருத்துதெரிவிக்கையில் தான் இந்த பெறுறேற்றினை பெற்றுக்கொள்வதற்கு தனது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் தந்த ஊக்கமே காரணம் என தெரிவித்ததோடு தான் எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராக வந்து வடமாகாண தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே தனதும் தனது பெற்றோரின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.