கௌதம புத்தரே ஆழ்ந்த சயனம் கலைவதெப்போ?

கௌதம புத்தரே ஆழ்ந்த சயனம் கலைவதெப்போ?

உண்மையான பௌத்தத்தை நேசிப்பவர்கள் எப்படி இருக்கக்கூடாதோ அவ்வாறு இருக்கிறார்கள் இலங்கையின் பௌத்தர்கள் சிலர்.அதுவும் அந்த புனித மத போதனைகளை செய்கின்ற தேரர்கள். இது நாட்டுக்கும் அவர்களுக்கும் ஏற்படுகின்ற அபகீர்த்தி என்பதற்க்கப்பால் அந்த கௌதம புத்தரை அவமதிக்கும் செயல்.
அந்த புத்த போதனைகளை உலகெங்கும் பின்பற்றுவோனுக்கும் இழுக்கு ஆக அமைந்து விடுகிறது.நான் எந்த விடயங்கள் பற்றி பேச விளைகிறேன் என்பது பற்றி உங்களுக்கு புரியும்.
பௌத்தம் பின்பற்றும் மியன்மார் தேசத்தில் அரசு ரோஹிங்கியா இன மக்களுக்கெதிராக இனச்சுத்திகரிப்பை கட்டவிழ்த்துவிட்டது. ஒரு இனம் முற்றாக அழிய வேண்டுமானால் அதன் வாழிடத்தை முதலில் அழிக்க சொல்கிறது விஞ்ஞானம். அந்த வகையில் ஒரு இனத்தை அந்த தேசத்திலிருந்து அகற்ற வேண்டுமாயின் அந்த இனத்தின் வாழிடம் அழிக்கப்படும் போது அது பல்வேறு திசைகள் திசைமாறி தனித்துவம்,சுயம்,கலாச்சாரம்,பண்பாடு , அடையாளம் என்பன இழந்து விரைவில் அழிந்துவிடும் என்பது கோட்பாடு என்பதற்க்கப்பால் நிதர்சனம்.

ஒரு கதை சொல்லவா?

ஒரு குடிமனையில் பாம்பு புத்து ஒன்று இருந்தது. அதற்க்குள் பாம்பு ஒன்று குடிகொண்டு வந்தது. குடிமனைக்காரன் அப்புற்றினை அழித்துவிட்டான். வாழிடம் இழந்த பாம்பு அயல் வீடுகளுக்குள் புகுந்து திரியவே பயத்தினால் அயல் வீட்டுக்காரர்க்ள் அதை அடித்தே கொன்று விட்டார்கள். ஆக ஒரு இனத்தை அழிக்க அதன் வாழிடத்தை முதலில் அழிக்க வேண்டும்.
அதை தான் பல இனஒடுக்குமுறை அரசுகள் மேற்க்கொண்டு வருகின்றன. இலங்கைத்தமிழர்களும் விதிவிலக்கல்ல. பல தமிழர்கள் இங்கு வாழ பயந்து புலம்பெயர்ந்து சென்றமை வெளிச்சம்.அது பற்றி இன்னொரு பதிவில் ஆராய்வோம்.
மியன்மார் என்ப்படும் பழைய பர்மிய தேசம் புத்தர் குடிகொளும் இடம். பௌத்த போதனைகள் சங்கமிக்கும் தேசம். இயற்கை வனப்பின் உறைவிடம். இராணுவ ஆட்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தேசம். மனித உரிமைகளை மீறி இருந்தது. அங்கு மனித உரிமை பேசிய ஆங் சூசியை வீட்டு சிறையில் இராணுவம் பல ஆண்டுகள் வைத்திருந்து பின் அவருக்கு மனித செயற்ப்பாட்டாளருக்குறிய நோபல் பரிசு கூட கிடைத்திருந்தது. இப்போது அவர் கட்சி தேர்தலில் கூட வென்று ஆட்சியமைத்திருந்தது எனினும் அங்கு ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கெதிராக பல இன ஒடுக்குமுறைகள் மேற்க்கவள்ளப்புடகின்றன. ஆங் சூகியும் கௌதம புத்தரைப் போல கண்மூடி தியானத்திலுள்ளார் போலும்.
பௌத்தம் போதிக்கும் நாட்டினரால் தான் இதுவும் சாத்தியமாகிறது.
உண்மையில் இவர்கள் புத்தரை நேசிக்கிறார்களா? பௌத்தத்தை விசுவாசிக்கிறார்களா ?என்று எண்ண தோன்றுகிறது. அங்கு அடக்குமுறைக்குட்பட்ட பல றோஹிங்கியா இனத்தவர்கள் பல நாடுகளுக்கு படகுகளில் உயிர்தப்பித்து வருகிறார்கள். அப்படி தான் இலங்கைக்கு கடந்த ஏப்பிரல் மாதமளவில் படகில் உயிர்ப்பிச்சை பாத்திரம் ஏந்தி வந்திறங்கிய 30குடும்பங்களை ஐ.நா பொறுப்பெடுத்து கல்கிசை பகுதியில் குடியமர்த்தியிருந்தார்கள். இப்போது அவர்கள் அங்கு தங்காமல் வெளியேற வேண்டும் என தேரர்கள் உட்பட பல பௌத்தர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்ககொண்டிருக்கிறார்கள்.
கௌதம புத்தனே நீ சயனத்தில் தானா இருக்கிறாய். நீ தீயவர்களுக்கு போதனைகள் பல செய்து நல்லவர்கள் ஆக்கினாய் அவர்கள் சுய உருவைக் காட்டுகிறார்களா?என்ன.
நீ போதித்தது பௌத்தம் தானே!! அப்படியென்றால் உயிர் பிச்சை கேட்டு வந்த மனிதர்களை அரவணைக்க உன்னை பின்பற்றுபவர்களாக சொல்வோரால் முடியவில்லையே ஏன்? உலக்த்துக்கு நீ போதனைகளை தந்தாயா? அல்லது உன் எலும்புகளையும் பல்லையும் வைத்து விழா எடுக்க தந்தாயா?
உன்னை நேசிக்கும் சைவர்களாக அதைவிட மனிதர்களாக வினவி நிற்க்கிறோம்.

ஒரு எடுத்துக்காட்டுக்காக வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப்பார்க்க பின்னோக்கி நகருவோம்.
இலங்கையை பௌத்த சிங்கள மன்னன் துட்டகாமினி பல தமிழர்களை கொன்றதனால் மனமுடைந்து, ஒரு நாள் பௌத்த மகா தேரர்களை சந்தித்து “நான் எனது வாளுக்கு பல தமிழர்களை இரையாக்கிவிட்டேன். பாவங்கள் என்னைச் சூழ்ந்து விட்டதே” என கவலை கொண்டு தெரிவித்தான்.
அதற்கு அந்த மாகா சங்க தேரர்கள் கூறினார்கள். “அவர்கள் பௌத்தத்தை பின்பற்றாதவர்கள் ,பாவமிழைத்தவர்கள் , பௌத்தத்தை பின்பற்றாறாததனால் விலங்குகளிலும் கீழானவர்கள் ,அப்படியானவர்களை கொல்வவதால் பாவம் சேராது ” என பௌத்த மரபின்படி கூறினார்கள்.(மகாவம்சம், paranavithana.s- 1961)
இப்படியான தேரர்கள் வழிவந்த தேரர்களின் செயற்பாட்டை இப்போதும் கண்கூடாக காணுகிறீர்கள் தானே.
ஒரு பௌத்த தேசம் விட்டியடிக்க இன்னொரு பௌத்த தேசம் மீண்டும் விட்டியடிக்க மனம் விராண்டியெடுக்கிறது.
கல்கிசையில் எம் நாட்டிடம் உயிர்ப்பிச்சை கேட்டு சரணடைந்த அந்த மனித இனத்தை சார்ந்தோரை வெளியேறுமாறு பௌத்தர்கள் போர்க்கொடி தூக்குவது புத்தனுக்கு எதிராக தூக்கும் போர்க்கொடி.
இதனை வேறு மதமாக இருந்தும் புத்தரின் போதனைகளையும் பின்பற்றும் எமக்கு மிகுந்த கவலையளிக்கிறது.
கௌதமனே நீ தியானம் கொள்.
“புத்தம் சரணம் கச்சாமி”

நன்றி
கு.மதுசுதன்