யாழ்குடாநாட்டில் இவ்வருடம் ஐந்து பேர் எயிட்ஸ் தொற்று

யாழ்குடாநாட்டில் இவ்வருடம் ஐந்து பேர் எயிட்ஸ் தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்தார்.இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 250 பேர் எயிட்ஸ் தொற்றுக்கு இலக்காகி இனங்காண்படுகிறார்கள் அதிலும் 25 பேர் வரையில் கர்ப்பிணி பெண்கள் எனவும் தெரிவித்தார்..இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் 5 பேர் எயிட்ஸ் நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளனர்.அதிலும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்..கடந்த 1987 ம் ஆண்டிலிருந்து இன்று வரை 90 ற்கும் மேற்பட்டவர்கள் யாழில் இனங்காணப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.2014 ம் ஆண்டிற்கு முன்னர்.40-50 பேர் வரையில் உரிய சிகிச்சை இன்மையால் இறப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.எனினும் 2014 யாழில் எயிட்ஸ் நோய் சிகிச்சை பிரிவு ஆரம்பமான பின்னர்.அவ்வாறான இறப்புக்கள் ஏற்படவுமில்லை எனவும் வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்தார்