நாம் அன்றாட வாழ்க்கையில் செய்திடும் சில தவறுகளால் தான் தலைவலி ஏற்படுகிறது. இன்றைக்கு அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய சாதரணமானதாக தலைவலி மாறிவிட்டிருக்கிறது.
தலைவலி மிகவும் கடினமானது தான். இதனை சரியாக கையாண்டால், நம்முடைய வாழ்க்கை முறையினை மாற்றினால் தலைவலி வராமல் தடுக்க முடியும் .
கிராம்பு
கிராம்புடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு டீஸ்ப்பூன் பால் சேர்த்து அப்படியே அதனை விழுங்கி விடுங்கள்.
உப்பிற்கு தண்ணீரை உறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இதனை உட்கொள்வதால் தலையிலுள்ள அதிகப்படியான தண்ணீரை உறிந்து கொள்ளும். இதனால் அதீத தலைவலி குறைந்திடும்.
எலுமிச்சை
பெரும்பாலும் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் தான் தலைவலி ஏற்படுகின்றன. ஒரு டம்பள் சூடான நீரில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சட்டென தலைவலி குறைந்திடும்.
இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதை தடுப்பதால் தலைவலிக்கு உடனடியாக நிவாரணம் கிடைத்திடும்.
சாப்பாடு
உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது என்றால் சீஸ், சாக்லெட், ஆட்டுக்கறி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.
இதற்கு பதிலாக விட்டமின் சி, விட்டமின் டி, விட்டமின் பி 12,புரதம், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஃபாஸ்ட் புட் மற்றும் அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளை தவிர்த்திட வேண்டும்.
வெந்நீர்
தலைவலியை குணமாக்க மிக எளிதான வீட்டு மருத்துவம் இது. ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவிற்கு வைத்திருக்க வேண்டும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் பதினைந்து நிமிடங்கள் இதனைச் செய்தால் போதும். சைனஸ் பிரச்சனையால் தலை வலி ஏற்ப்பட்டிருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக தலைவலி இருந்தாலோ இப்படிச் செய்வதானல் குணமாகும். இதனை தொடர்ந்து மூன்று வாரங்கள் வரை செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.
ஆவி பிடித்தல்
ஆவிப்பிடிப்பது தலைவலியை குணப்படுத்தும். நெல்லிக்காயை சாறெடுத்து அதில் தேவையான அளவு உப்பு கலந்து கொள்ளுங்கள்.
இதனை நீங்கள் ஆவிப்பிடிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து ஆவி பிடித்தால் நல்ல பலன் உண்டு.