ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக எம்.ஜி.ஆர் சிலைத்திறப்பு விழாவில் அவர் பேசியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அந்த நிகழ்வில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துக்கொண்டார், அவர் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அதோடு ரஜினியை முதலமைச்சர் ஆக்க வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது என அவர் கூறியது அந்த அரங்கில் பெரும் வரவேற்பு பெற்றது.
ஆனால், விஜய் ரசிகர்களிடையே இது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் விஜய்யும் வெகுவிரைவில் அரசியலுக்கு வருவார் என பலர் கூற, இவர் இப்படி பேசியது விஜய் ரசிகர்கள் தரப்பி அதிருப்தி தான்.