சனிபகவான் 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து தன்னுடைய வீடான மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
இந்த சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழ உள்ளது. இந்த இடப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி, கும்ப ராசிக்கு விரைய சனியாக உள்ளது.
சனி பகவான் கும்ப ராசிக்கு 12ஆம் இடத்திற்கு வருவதால், கும்ப ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம் ஆகின்றது. இது கும்ப ராசிக்கு விரய சனி.
இருப்பினும் இதனால் கும்ப ராசிக்கு அதிக பாதிப்பை தர மாட்டார்.
விபரீத ராஜயோக நிலை இருக்கும். இதுவரை லாப சனியாக இருந்த நிலையில் தற்போது விரய சனியாக அமர்வதால், உங்களின் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் செலவு ஏற்படக் கூடிய காலம். அது சேமிக்கு வகையில் அதாவது முதலீடுகளாக இல்லாமல் தேவையற்ற செலவாக இருக்கும்.
30 வயதுக்கு உட்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது பொங்கு சனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்கள் சேரும்.
கும்ப ராசியினரை விரய சனி என்ன செய்யும்?
திடீர் செலவுகள் ஏற்படலாம். மருத்துவ செலவு ஏற்படலாம். கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை முதலீடு செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம்.
பயணங்களிலும் மிக கவனமாக இருப்பது அவசியம்.
வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவது கூடாது. அந்த வாக்குவாதங்களில் வீண் வார்த்தைகள், வாக்குகள் கொடுத்து அதன் மூலம் தேவையில்லாத செலவுகள் ஏற்படக் கூடும்.
மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு படிப்பது நல்லது. சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் சனி உங்களுக்கு சிறப்பான வளர்ச்சியை தருவார்.
பரிகாரம்
குச்சனூரில் உள்ள சனி பகவான் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வருவதால் நன்மை விளையும்.