ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவர உதவிய கேரள நபர் |
ஸ்ரீதேவியின் உடலை ஐக்கிய அரபு அமீரகத்தின் சவக்கிடங்கில் இருந்து எடுத்துச் செல்ல உதவியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த ‘அஷ்ரஃப்’.
44 வயது மிக்க இவர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சடலங்களை அவரவர் நாட்டிற்கு கொண்டு செல்ல உதவுகிறார். உலகெங்கிலும் 38 நாடுகளுக்கு 4,700 சடலங்களை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல உதவியுள்ளார் அஷ்ரஃப். இவ்வாறு துபாயில் இறந்தவர்களை அவரவர் நாட்டுக்கு கொண்டு செல்ல உதவுவதை ஒரு உயர்ந்த பொறுப்பாக அவர் கருதுகிறார்.
சடலமாக இருப்பவர் ஏழையோ, பணக்காரரோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவர்களின் பிரேத பரிசோதனை எல்லாம் முடிந்த பிறகு துபாயோ, ஷார்ஜாவோ எங்கு இருந்தாலும் அந்த சடலத்தை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல உதவுவார்.
அஷ்ரஃப், ஸ்ரீதேவி பற்றி பேசியபோது பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் உடல் உட்பட நான்கு சடங்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப உதவினேன். ஸ்ரீதேவி இந்தியாவில் உள்ள பலரின் கற்பனைக்கு மேல் சக்தி கொண்டிருப்பதைக் உணரமுடிகிறது என்று கூறினார்.
தென்னிந்திய பிராந்திய திரைப்படங்களில் 4 வயது குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, தனது திறமையின் மூலமாக தமிழ் மட்டுமின்றி இந்திய திரையுலகில் முழுவதும் பிரபலமானார். 1987-ல் வெளிவந்த மிஸ்டர் இந்தியா என்ற படத்தின் மூலம் நடனம், நடிப்பு, நகைச்சுவை என பல்வேறு திறமைகளை வெளிபடுத்தினார் என்றும் ஆஷ்ரஃப் கூறினார். காவல் துறையினரும், வழக்கறிஞர்களும் ஸ்ரீதேவி அவரது ஹோட்டல் குளியல் தொட்டியில் மூழ்கிவிட்டதாக கூறியதாக அவர் கூறினார்.
ஸ்ரீதேவியின் இறப்பு செய்தி இந்திய ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பெரிதாக ஆதிக்கம் செலுத்தியது. ஒரு ஊடகத்தில் செய்தியாளர் குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு ஸ்ரீதேவியின் மரணத்தை குறித்து பேசுவது போன்ற காட்சியும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பல செய்தித்தாள்களில் அவர் மது அருந்தியிருப்பதே வெளியிடவில்லை.
இந்திய அதிகாரிகள் உடனடியாக ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து, மற்ற ஆவணங்களை தயாரித்து வழங்கியபோது, ஸ்ரீதேவியின் தாய் நாடு திரும்புவதற்கு காவல் துறையினர் அனுமதி அளித்ததாக அஷ்ரஃப் தெரிவித்தார்.