2020 இல் முழு குடும்பத்தையும் ஆட்டிப்படைக்க குறி வைத்திருக்கும் ஏழரைச் சனி! தப்பிப்பது எப்படி தெரியுமா? யாருக்கு திடீர் விபரீத ராஜயோகம்?

சனிபகவான் 2020ஆம் ஆண்டு தனுசு ராசியில் இருந்து தன்னுடைய வீடான மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழ உள்ளது.

இந்த இடப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி, கும்ப ராசிக்கு விரைய சனியாக உள்ளது. ஒரு குடும்பத்தில் மகரம் கும்பம் ராசியில் பிறந்த கணவன் மனைவிக்கும், தனுசு ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் ஏழரை சனி காலமாகும்.

எல்லோருக்குமே ஏழரை சனி என்றால் என்ன செய்வது பரிகாரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்பவர்களுக்குதான் இந்த பதிவு.

ஏழரை சனியின் பிடியில் இருப்பவர்கள் ஒரே குடும்பத்தில் பிறந்திருந்தால் என்னென்ன பலன்கள் பாதிப்புகள் இருக்கும் என்று பார்க்கலாம்.

30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி பிடித்தே தீரும்.

ஒரு வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்டவர்களுக்கு ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. ஒரு வீட்டில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி ஒரே நேரத்தில் என்றாலும் பாதிப்பு ஏற்படும்.

மகன், மகளை படிப்பிற்காக விடுதியில் சேர்க்கலாம். கணவன் அல்லது மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

2020 ஜனவரி முதல் தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகப்போகிறது. தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும் நேரத்தினால் பெருமூச்சு விடுவீர்கள். ஏழரை சனி முடியலை இருந்தாலும் ஜென்மத்தில் பட்ட சிரமங்களை இனி படப்போவதில்லை.

இரண்டரை வருஷம் நிம்மதி தருவார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போவது கவனம் தேவை. கடல் கடந்து செல்பவர்களுக்கு முன்னேற்றம் வரும். கடகத்தை சனி பார்ப்பதால் வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். வருமானம் அதிகமாக வரும்.

சனி வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார். பொறுமை தேவை இரண்டரை வருடத்தை எளிதாக கடந்து விடலாம்.

ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஒரே ராசிக்காரர்களாகவோ அல்லது ஏழரை சனி, அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரம்.

அனுமனை சரணடைவதும் குடும்பத்தில் சந்தோசத்தை அதிகரிக்கும். இதேவேளை, நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே தவறு செய்யாதவர்கள் நல்லது மட்டுமே நினைப்பவர்கள் பயப்பட வேண்டாம். நல்லது செய்தால் திடீர் விபரித ராஜயோகமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.