வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும்.
முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணெயையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்