ஜனவரி மாதம் முழுவதும் விபரீத ராஜயோகம் யாருக்கு? இந்த ராசிக்கு தன லாபமாம்! மிதுன ராசியினரே எச்சரிக்கை

2020ஆம் ஆண்டு பிறந்து விட்டது. புத்தாண்டின் முதல் மாதம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லோருக்கும் அதிகமாகவே இருக்கும்.

புத்தாண்டில் நமக்கு என்ன வாய்ப்புகள் கிடைக்கும் என்னென்ன சவால்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கும்.

நம்முடைய நட்சத்திரங்கள் ராசியின் அடிப்படையில் புத்தாண்டின் தொடக்கம் எப்படி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனவரி மாத ராசி பலன்களை முழுமையாக படியுங்கள்.

மேஷம்
புத்தாண்டின் முதல் மாதம் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். கிரகங்களின் சஞ்சாரம் சூரியனுடன் இணைந்து தனுசு ராசியில் உள்ளன.

மாத முற்பகுதியில் எதிர்பாராத சில லாபங்கள் கிடைக்கும். உங்களோட உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த மாதம் வீடு அல்லது வேலையில் இடமாற்றம் ஏற்படும். அந்த இடமாற்றம் உங்களுக்கு ரொம்ப நன்மையை கொடுக்கும். வேலை விசயமாக நீங்க நீண்ட பயணம் போகலாம். வெளிநாடு வாய்ப்பு உங்களை தேடி வரலாம் அதை பயன்படுத்திக்கங்க.

உங்க சொந்த வாழ்க்கையில நீங்க சொந்த சந்தோஷமாக இருப்பீங்க. குடும்ப உறுப்பினர்களால் நீங்க சில மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இந்த மாதம் உங்களுக்கு திடீர் பணம் வருமானம் வரலாம்.

திடீர் மாற்றங்களைத் தரக்கூடிய ஆண்டின் தொடக்கமாக ஜனவரி மாதம் உங்களுக்கு வரப்போகிறது சந்தோஷமாக தொடங்குங்கள்.

இந்த மாதம் உங்களுக்கு நன்மை செய்யும். நன்மை செய்யும் கிரகம் உங்க ராசிநாதன் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 10.18.27.34.44
அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், புதன், ஞாயிறு, சனி
அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரௌன், அடர் சிவப்பு,பச்சை, மஞ்சள்

ரிஷபம்
இந்த மாதம் உங்க காதல் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்வீர்கள். உங்கள் காதல் வலிமையடையும். மாதத்தின் மத்தியில் நீங்க ரொம்ப சந்தோஷமாக உங்க இல்லற வாழ்க்கையை தொடங்குவீர்கள்.

காதல் துணையுடன் திருமணம் கை கூடி வரும். காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறலாம். திருமணமான தம்பதிகளுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். வீட்டில் மாமியார் மருமகள் பிரச்சினை எட்டிப்பார்க்கலாம்.

நீங்க வேலை செய்யும் இடத்தில் புதுப்புது ஐடியாக்களை உருவாக்குவீர்கள். அது உங்களுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும். வர்த்தகர்கள் முதலீடு பண்ணுங்க நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் படிப்பில் மந்த நிலை மாறி புலியாக மாறுவீங்க நல்லா பரிட்சை எழுதுவீங்க. போட்டி தேர்வுகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்வீங்க. உங்க நிதி நிலைமை ரொம்ப பலமாக இருக்கும் பணம் விசயத்தில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

பஞ்சபூதங்களில் பூமி நன்மை செய்யும். நன்மை செய்யும் கிரகம் உங்க ராசிநாதன் சுக்கிரன்.

அதிர்ஷ்ட எண்: 9,11,25,39,46,50
அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி
அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க வேலையையும், பெர்சனல் லைப்பையும் ரொம்ப பேலன்ஸ் பண்ணுவீங்க. வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் செய்தாலும் அதை முறியடித்து வெற்றிகரமாக சில சாதனைகள் செய்வீர்கள்.

உங்களுக்கு டிரான்ஸ்பர் புரமோசன் கிடைக்கும். உங்க வேலைக்கு மதிப்பும் மரியதையும் கூடும். அரசு வேலைக்காக கடுமையாக முயற்சி பண்ணுங்க நிச்சயம் நல்லது நடக்கும். வணிகர்களுக்கு ரொம்ப நல்ல துவக்கமாக இருக்கும். 2019ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்டாக் வைத்திருந்த பொருட்கள் எல்லாம் இந்த மாதம் விற்றுத்தீரும். வேலையில் இது வெற்றிகரமான மாதமாக அமையும்.

உங்க எதிராளிகளிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்க. பணம் விசயத்தில் உங்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக அமையும். பண விசயத்தில் கவனமாக இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். உங்க பண உதவிகள் உங்கள் அன்பிற்கு உரியவர்களிடம் இருந்து கிடைக்கும்.

மொத்தத்தில் ஜனவரி மாதம் நன்மை தீமைகள் நிறைந்த மாதமாக அமையும். பஞ்சபூதங்களில் காற்று நன்மை செய்யும். உங்க ராசிநாதன் புதன் சாதகமாக கிரகம்.

அதிர்ஷ்ட எண்: 4,15,28,34,41,59
அதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, ஞாயிறு,வியாழன், சனி
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை,அடர்பச்சை,ஸ்கை, மெரூன்

கடகம்
இந்த மாதம் உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் கிடைக்கும். உங்க ராசிக்கு சாதகமாக கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது அதுவே உங்களை வெற்றிபெற வைக்கும். உங்களின் பொருளாதார சூழ்நிலை உங்களுக்கு சந்தோஷத்தைக்கொடுக்கும்.

உங்களுடைய பண வருமானம் சாதகமான சூழ்நிலையைக் கொடுக்கும். தொழிலில் முதலீடு செய்ய இது உங்களுக்கு சாதகமான மாதம் ஒரு மடங்கு செய்யும் பணம் பல மடங்காக திரும்ப வரும். ரியல் எஸ்டேட் தொழில் பண்றவங்களுக்கு ரொம்ப சாதகமான மாதமாக அமையும்.

வேலை செய்யும் இடத்தில் உங்க சீனியர்ஸ் உடைய சப்போர்ட் கிடைக்கும்.

வணிகம், வியாபரம் செய்பவர்கள், தொழிலதிபர்களுக்கு இது சாதகமான மாதம். அதே நேரம் புது பிசினஸ் செய்ய இது சாதகமான மாதமல்ல எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. உங்க குடும்பத்தில சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. சண்டை போடதீங்க அன்பாகவும் அமைதியாகவும் பேசுங்க.

அப்பதால் வீட்டு சூழ்நிலை சாதகமாக இருக்கும். 2020 புத்தாண்டு உங்களுக்கு சந்தோஷங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கட்டும். பஞ்சபூதங்களில் நன்மை தரக்கூடியது நீர். நன்மை தரும் கிரகம் உங்க ராசிநாதன்
சந்திரன்

அதிர்ஷ்ட எண்: 6,9,20,33,49,56
அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், திங்கள், ஞாயிறு புதன்
அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ளூ, க்ரீம், பர்ப்பிள், இளம் மஞ்சள்

சிம்மம்
2020 புத்தாண்டு சிம்ம ராசிக்காரத்களுக்கு ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. நன்மை தரக்கூடிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். உங்க தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்ல விசயங்கள் நிறைய நடந்தாலும் உடல் ஆரோக்கியத்தில நீங்க அவசியம் அக்கறை காட்டுங்க.

வயிறு தொடர்பான பிரச்சினை உங்களுக்கு வரலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதுவே உங்க மன அழுத்தத்தை அதிகமாக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு இது சாதாரணமான மாதம். பிசினஸ் விசயமாக போகும் பயணம் உங்களுக்கு சாதகமாக முடியும். வணிகர்கள் வியாபாரிகளுக்கு இது ரொம்ப நல்ல மாதம். திருமணமானவர்களுக்கு இது மகிழ்ச்சி தரும் மாதம்.

பண விசயத்தில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதமாகவே இருக்கும். நீங்க எதிர்பார்த்ததை விட இந்த மாதம் வருமானம் அதிகம் வரும். அதே நேரம் செலவுகளும் உங்களுக்கு அதிகமாக இருக்கும். பணத்தை கொஞ்சமாவது சேமியுங்கள்.

பஞ்சபூதங்களில் நெருப்பு நன்மை செய்யும் உங்க ராசிநாதன் சூரியன் நன்மை செய்யும் கிரகம்

அதிர்ஷ்ட எண்: 5,9,17,28,36,49
அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை
அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், அடர் சிவப்பு, ஸ்கை,ஆரஞ்ச்

கன்னி
கன்னி ராசிக்காரர்களே 2020ஆம் ஆண்டின் தொடக்கம் அற்புதமாக அமைகிறது. மாணவர்களுக்கு இது பிஸியான மாதம் தேர்வுக்காக நல்லா பிரிப்பேர் பண்ணுவீங்க. நல்லா படிங்க தேர்வுகளை நல்லா எழுதுவீங்க. உங்க இலக்கை அடைய நீங்க ஹார்ட் ஒர்க் பண்ணுங்க.

உயர்கல்விக்கு முயற்சி பண்ணுங்க உங்களுக்கு பிடித்த கல்லூரியில் இடம் கிடைக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக அமைகிறது. பணம் உங்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க நிறைய பாடுபட வேண்டும்.

பணத்தை கவனமாக ஹேண்டில் பண்ணுங்க. பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் வரலாம் அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கவனமாக பேசுங்க.மன அமைதி வேண்டும் என்றால் உங்க வாழ்க்கை துணையோட நீங்க விவாதம் செய்யாதீங்க.

கவனமாக ஹேண்டில் பண்ணுங்க அப்பத்தான் கூலாக இருக்க முடியும். நெகடிவ் ஆக எதையும் யோசிக்காதீங்க. அதிக மன அழுத்தம் உங்க உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். வேலை செய்பவர்களுக்கு இது சராசரியான நார்மலான மாதமாக அமையும். நன்மை செய்யும் பஞ்சபூதம் பூமி. உங்களுக்கு உங்க ராசிநாதன் புதன் நன்மை செய்யும்.

அதிர்ஷ்ட எண்: 2,11,18,20,35,44
அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை
அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம், வெள்ளி, பச்சை, ப்ளூ

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த ஆண்டின் தொடக்கமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். உங்க வேலையை பார்த்து சீனியர்ஸ்க்கு திருப்தி ஏற்படும். உங்களுக்கு டிரான்ஸ்பர் வேண்டும் என்றால் முயற்சி பண்ணுங்க கண்டிப்பாக கிடைக்கும். நல்ல வேலை கிடைத்தால் கண்டிப்பாக வேலையை மாறிக்கொள்ளலாம்.

புது பிசினஸ் ஆரம்பிக்கவேண்டும் என்று முடிவு செய்தால் கண்டிப்பாக புது பிசினஸ் ஆரம்பிங்க நல்லதே நடக்கும். பொருளாதார நிலை உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்க ரொமான்டிக் லைப் சந்தோஷம் தரக்கூடியதாக இருக்கும். உங்க குடும்ப வாழ்க்கையில நீங்க சின்னச் சின்ன சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். திருமணமானவர்களுக்கு இது சந்தோஷம் நிறைந்த மாதம். உங்க துணையுடனான பிணைப்பு ரொம்ப ஸ்டிராங் ஆக இருக்கும்.

மிகப்பெரிய சாதனைகளை செய்யக்கூடிய மாதமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க இல்லாட்டி பெரிய பிரச்சினையில கொண்டு போய் விட்டு விடும். பஞ்ச பூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும். சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 8,19,23,38,45
அதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, புதன், திங்கள், ஞாயிறு
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூன், ப்ரௌன், சிவப்பு

விருச்சிகம்
2020 புத்தாண்டின் தொடக்கமான ஜனவரி மாதம் ரொம்ப நல்ல மாதமாக அமைகிறது. பணம் நிறைய வரலாம். சின்ன வேலைகள் செய்தால் கூட பணம் அதிகமாக வரும். நீங்க முதலீடு செய்யும் பணம் உங்களுக்கு பல மடங்காக திரும்ப வரும். உங்க நிதி நிலைமை உங்களுக்கு உற்சாகத்தை தரும்.

அதை பத்திரமாக சேமித்து வையுங்கள். உங்களுக்கு வருகிற பணத்தை சுப செலவுகளுக்கு செலவு பண்ணுங்க. புது வண்டி வாகனம் வாங்க நல்ல மாதம். வீடு பராமரிப்பு செய்யலாம்.

வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

உங்க வருமானம் அதிகமாக பெற்றவர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். திருமண வாழ்க்கை உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். நீங்க ரொம்ப பிஸியாக இருப்பீங்க. 2020 ஆம் ஆண்டு உங்களுடைய சந்தோஷத்தை அதிகரிக்கப் போகிறது. உங்களுடைய உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நீங்க தொட்டது துலங்கும் உங்க வேலைகளை உற்சாகமாகவும் வேகமாகவும் செய்து முடிப்பீர்கள். பஞ்ச பூதங்களில் தண்ணீர் உங்களுக்கு நன்மை செய்யும். நன்மை தரும் கிரகம் செவ்வாய் மற்றும் புளூட்டோ.

அதிர்ஷ்ட எண்: 3,16,23,37,47,52
அதிர்ஷ்ட நாட்கள்: புதன், ஞாயிறு, சனி, செவ்வாய்
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, பச்சை, மஞ்சள், புளூ

தனுசு
2020 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்கள் உங்கள் துறையில் வெற்றியை அடைய விரும்பினால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் விரைவாக முயற்சித்தால், உங்கள் முன்னேற்றம் இந்த மாதத்தில் தொடங்கலாம்.

கிரங்களினால் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப நீங்கள் பலன்களைப் பெறவில்லை என்பதை உணருவீர்கள். விட்டுவிடாதீர்கள், உங்களை நம்பி முன்னேறுங்கள். நீங்கள் வியாபாரம் செய்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் சில பணிகளை முடிப்பதில் நீங்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும், ஆனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், எனவே பீதி அடைய வேண்டாம், பின்வாங்க வேண்டாம்.

இந்த நேரத்தில், பணத்தைப் பெறுவதற்கான நோக்கத்திற்காக நீங்கள் செய்த வேலையிலிருந்து நல்ல முடிவுகளைப் பெறலாம், மேலும் உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இருப்பினும், நிதி பரிவர்த்தனைகளைச் செய்யும்போது நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் இழப்பை சந்திக்க நேரிடும். ஒரு புதிய வேலையில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க விரும்பினால், அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து சரியான ஆலோசனையைப் பெறுவது நல்லது.

நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருங்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சீராக செல்லும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் நீங்கள் நீண்ட நேரம் வீட்டை விட்டு விலகி இருக்க முடியும். உங்கள் காதல் வாழ்க்கையில் இந்த நேரத்தில், நீங்கள் பலமாக உணருவீர்கள்.

விரைவில் நீங்கள் உங்கள் துணையுடன் திருமணம் கை கூடி வரும். பஞ்சபூதத்தில் நெருப்பு உங்களுக்கு சாதகமானது. குரு உங்களுக்கு சாதகமான கிரகம்.

அதிர்ஷ்ட எண்: 2,8,13,18,29,33,45
அதிர்ஷ்ட நாட்கள்: சனி, திங்கள், புதன், செவ்வாய்
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், அடர் பச்சை,பிங்க், ஸ்கை, பர்ப்பிள்

மகரம்
மகரம் ராசிக்காரர்களே 2020ஆம் ஆண்டின் முதல் மாதம், நீங்கள் எந்த புதிய வேலையையும் தொடங்கலாம், இது உங்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். உங்க வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இந்த மாதம் பணிச்சுமை கணிசமாக அழுத்தம் அதிகரிக்கும்.

நீங்கள் கடினமாக உழைப்பீர்கள், வேலைகளை மாறுவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும், ஆனால் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும், அவசரப்பட வேண்டாம். இந்த நேரம் வர்த்தகர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இந்த காலகட்டத்தில் நீங்கள் சில ஆபத்தான பணிகளை செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் எச்சரிக்கையுடனும் புரிதலுடனும் முன்னேறுவது நல்லது. நீங்கள் சொத்தில் முதலீடு செய்ய விரும்பினால், நேரம் அதற்கு மிகவும் சாதகமானது. தனிப்பட்ட உறவு பற்றி பேசினால், இந்த மாதத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆரம்ப நாட்கள் நிம்மதியாக இருக்கும் வீட்டில் சில பதற்றம் ஏற்படலாம். கருத்து வேறுபாடு காரணமாக நீங்கள் மிகவும் மனதளவில் பாதிக்கப்படுவீர்கள்.

இந்த நேரத்தில், வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்காது. உங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உங்கள் நன்மை சமநிலையை வைத்திருப்பதில் உள்ளது. ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த நேரம் உங்களுக்கு சரியானதாக இருக்கும். அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். நல்லதே நடக்கும். பஞ்சபூதங்களில் பூமி சாதகமானது. சாதகமான கிரகம் உங்க ராசிநாதன் சனி.

அதிர்ஷ்ட எண்: 9,14,27,30,46,51
அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன்
லக்கி நிறங்கள்: மஞ்சள், மெரூன்,க்ரீம், பர்ப்பிள், ஆரஞ்ச்

கும்பம்
2020 ஜனவரி மாதம் மாணவர்களுக்கு மிகவும் நல்ல மாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்துறையில் நீங்கள் எந்த பெரிய வெற்றிகளையும் பெறலாம். உங்கள் படிப்பை முடித்த பிறகு நீங்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருந்தால், இந்த மாதத்தில் நீங்கள் ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல பதவியைப் பெறுவீர்கள். உங்கள் தேர்வுக்கு நீங்கள் தயாராகி வருகிறீர்கள் என்றால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

கல்வியின் மீதான உங்கள் விருப்பம் இந்த மாதத்தில் அதிகமாக இருக்கும். சேவைத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த நேரம் மிகவும் புனிதமானதாக இருக்கும். உங்களால் முடிந்ததை நீங்கள் வழங்க முடியும், மேலும் உங்கள் செயல்கள் மிகவும் பாராட்டப்படும். உங்கள் பணி செயல்திறனைப் பொறுத்து, கையாள சில புதிய திட்டங்கள் உங்களுக்கு வழங்கப்படலாம். இவற்றை வெற்றிகரமாக முடித்தால், விரைவில் நன்மைகளைப் பெறுவீர்கள்.

இந்த நேரம் வர்த்தகர்களுக்கும் லாபமாக இருக்கும். உங்கள் எதிரிகளை தோற்கடிப்பீர்கள். உங்கள் வெற்றியைத் தடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடையும். பணம் தொடர்பான விஷயங்களைப் பற்றிப் பேசினால், நீங்கள் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ, அவ்வளவு லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் செலவுகளும் கணிசமாக அதிகரிக்கும். ஒரு பெரிய குடும்பப் பொறுப்பை நிறைவேற்ற நீங்கள் நிறைய பணம் செலவிடலாம்.

இந்த மாதத்தில் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான விழா ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது, இதன் காரணமாக விருந்தினர்கள் வீட்டிற்கு வரத் தொடங்குவார்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். பஞ்சபூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும். சாதகமான கிரகம் சனி. உங்க ராசிநாதன் சனி நன்மை செய்யும். யுரேனஸ் ஒத்துழைப்பு கொடுக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1,5,18,24,37,48,59
அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, செவ்வாய், திங்கள், சனிக்கிழமை
அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் பச்சை, பிங்க்,வெள்ளை, மஞ்சள், சிவப்பு

மீனம்
இந்த மாதத்தில் வேலையில் பிஸியாக இருப்பதால், உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த முடியாது, இது உங்கள் உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் மனைவியுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்டு மன அழுத்தம் இருக்கும். அவர்களின் கோபத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும். இந்த விஷயத்தில் உங்கள் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்படும்.

விட்டுக்கொடுத்து போங்கள். நீங்கள் வீட்டில் அமைதியைக் காக்க விரும்பினால், உங்கள் குடும்பத்திற்கும் போதுமான செலவு செய்ய வேண்டும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்களை நீங்கள் குழப்பிக் கொள்வீர்கள்.

என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று உங்களுக்கு புரியாது, எனவே நீங்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும்.

நீங்கள் வேலையில்லாமல் இருந்தால் இந்த மாதத்தில் நிரந்தர வேலை பெறலாம். வணிகர்கள் தங்கள் வேலையை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எந்தவொரு புதிய வேலையும் தொடங்க இந்த நேரம் சாதகமாக இல்லை. நீங்கள் எந்தவிதமான ஆபத்தையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது கடினமாக இருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் நீங்கள் மன ரீதியாக பலவீனமாக உணர்வீர்கள்.

வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளால் நீங்கள் வருத்தப்படலாம், பணத்தின் அடிப்படையில் இந்த மாதம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். நாம் பெரிய பொருளாதார பரிவர்த்தனைகளை செய்யாவிட்டால் நல்லது. பஞ்சபூதங்களில் நீர் நன்மை செய்யும். நன்மை செய்யும் கிரகம் குரு , நெப்டியூன்.

அதிர்ஷ்ட எண்: 3,19,23,39,47,55
அதிர்ஷ்ட நாட்கள்: வியாழன்,திங்கள், வெள்ளி, ஞாயிறு
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு, ஸ்கை, ஆரஞ்ச், ஞாயிறு