தொண்டமானாறு கடல் நீரேரியில் இளைஞன் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப் செல்லப்பட்டுள்ளான்

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

5 நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணிநேரமாகதர தேடினர். எனினும் இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.