கற்றாழை செடி ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட மிகவும் அற்புதமான ஓர் செடி.
கற்றாழையின் பயன்கள் பெருமளவில் உள்ளன. தோலில் ஏற்படும் வெடிப்பு, எரிச்சல், தோல் அலர்ஜி போன்றவற்றிற்கு சோத்து கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.
கற்றாழை சாற்றில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.
உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கற்றாழை சாற்றில் அதிக அளவில் உள்ளன.
உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள பாதிப்புகளை சரிசெய்து புனரமைப்பதற்கு, கற்றாழை சாற்றில் உள்ள சத்துக்கள் துணை புரிகின்றன.
வெளிப்புற காரணிகளுக்கு ஏற்றவாறு, உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியை கற்றாழை சாறு அளிக்கிறது. உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை உடலுக்கு அளித்து, அவற்றை உடலில் தேக்கி வைக்க கற்றாழை சாறு பயன்படுகிறது.
கற்றாழை ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடனே விலகும்.
உங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.
நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு, கற்றாழை ஜூஸ் மிகவும் அற்புதமான ஓர் பானம். உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
கற்றாழை ஜூஸ் உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே உங்களுக்கு புற்றுநோய் தாக்கக்கூடாது என்று நினைத்தால், இந்த ஜூஸை தினமும் குடியுங்கள்.
முடி வளர்ச்சியை தூண்டும் கற்றாழை
குளிக்கும் முன் கற்றாழை ஜெல்லை, தேங்காய் பாலுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.
கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஷாம்பு தயாரித்தும் பயன்படுத்தலாம்.
அதற்கு கற்றாழை ஜெல்லில், ஆப்பிள் சீடர் வினிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனால் முடியின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.