நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளுக் கட்சிகள் இடையேயான ஆசணப் பங்கீடு தொடர்பிலான நேற்றைய கலந்துரைரையாடலில் இறுதி முடிவு எட்டப்பட்டது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையில் கொழும்பில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின் மூன்று கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிப்போர் கலந்து கொண்டனர்.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு 7 ஆசணங்களும் புளட் அமைப்பிற்கு இரண்டு மற்றும் ரெலோவிற்கு ஒரு ஆசணமும் ஒதுக்கப்பட்ட அதே நேரம் வன்னி மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு 4 , ரெலோ 3 , புளட் 2 எனவும் இணக்கம் காணப்பட்டது.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ் அரசுக் கட்சிக்கு 5 ஆசணமும் ரெலோவிற்கு 2 ஆசணமும் புளட் அமைப்பிற்கு ஒரு ஆசணமும் என கட்சிகள் இணக்கம் கண்டுள்ளனர். இதேநே்ம் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மூன்று கட்சிகளும் இணைந்து பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் இணக்கம் கானப்பட்டுள்ளது. –